Editor's Picksஅரசியல்தமிழ்நாடு

‘தில் இருந்த தனித்து மோதி பாருங்கள்’ – சீமான் சவால் !

தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக கூறிக்கொள்ளும் பாஜக, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா ? என நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி சீமான்

கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதன் காரணமாக நாம் தமிழர் கட்சினர், மதிமுகவினர் பலர் மீது வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி சுபாஷிணி முன்பு ஆஜராயினர். இதேபோல் இவ்வழக்கில், மதிமுக மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு உள்ளிட்ட மதிமுகவினரும் ஆஜரானார்கள்.

seeman spech ntk

செய்தியாளர்கள் சந்திப்பு

அதனை தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘மதிமுகவிற்கும், எங்களுக்கும் எந்த பகையும் இல்லை. என்னை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்படியாவது காங்கிரஸ் கட்சினர் வெளியே வந்து போராட்டம் நடத்துகிறது என்பதில் மகிழ்ச்சி. கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதாக கூறும் திமுக உங்கள் தொலைக்காட்சியில் என்னை அரை மணி நேரம் பேச அனுமதிப்பீர்களா.

பத்திரியாளர்கள் மீது வழக்கு

சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று கூறிவருவதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும் ? வாதத்திற்கு பிரதிவாதம் செய்வதன் மூலமாக தான் எதையும் உருவாக்க முடியும். யூடியூபர்கள் மாரிதாஸ், சவுக்கு சங்கர் என பலர் தங்களது கருத்துகளை கூறினால், அதற்கு எதிர் கருத்துகளை தான் முன்வைக்க வேண்டும். உடனே அவர்களை சிறையில் அடைப்பது எந்த விதத்தில் சரியாகும்.

crime rate tamilnadu

பதிலடி

பேரறிவாளன் விடுதலை பற்றி எதிர்கருத்து கூறிவரும் அண்ணாமலையை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான், ‘பேரறிவாளன் விடுதலையை நாங்கள் எந்த வகையிலும் கொண்டாடவில்லை. அப்படி கொண்டாட வேண்டுமென்றால் நான் தான் முக்கியமாக கொண்டாட வேண்டும். பேரறிவாளன் நிரபராதி இல்லை என்று கூறும் அண்ணாமலை, மோடி மற்றும் அமித்ஷாவுக்கு தெரியாமல் குஜராத்தில் கலவரம் நடைபெற்றதா? அந்த வழக்குகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டது ஏன் ? என்று அண்ணாமலை கூற வேண்டும்.

perarivala meet seeman

அண்ணாமலைக்கு சவால்

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாம் என்ற சித்திரவதை கூடத்தை உருவாக்கியவர் கருணாநிதி. இதனை மூட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். கடந்த 31 ஆண்டுகளில், ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் செய்த குற்றங்கள் என்ன ? குற்றம் செய்தார்கள் என ஏதாவது ஒன்றை சொல்ல முடியுமா ?’ என கூறினார்.

மேலும், ‘ஒவ்வொரு துறைகளிலும் தேர்வு வைத்து, அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டும்தான் அரசியல் தலைவர்களாக உருவாக்க வேண்டும். பாஜக பெரிய கட்சி என்றால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்களைப் போன்று பாஜக தனித்து போட்டியிட தயாரா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

bjp annamalai

தனித்து போட்டியிடுவீர்களா

பாஜக என்பது எங்கள் மரத்தின் கீழே உள்ள நிழலில் முளைத்து இருக்கும் குட்டை செடி. தமிழகத்தில் பாஜக வளர்கிறது என்றால் முதலில் பாஜகவை தனித்து போட்டியிட்ட சொல்லுங்கள். அதன் பின்னர் தான் அண்ணாமலை எதையும் பேச வேண்டும். முடிந்தால், தேசியக் கட்சியான காங்கிஸும் தனித்து போட்டியிடட்டும். திமுக அதிமுக தனித்து போட்டி போடட்டும். அப்போது தெரியும் யார் கட்சி பெரியது’ என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாநில மற்றும் தேசிய கட்சிகளை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts