அரசியல்தமிழ்நாடு

அண்ணாமலை தமிழக முதல்வர் ஆவார் – இயக்குனர் பேரரசு !

பாஜக அண்ணாமலையை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர். அவருக்கு தமிழக முதல்வராக வாய்ப்பு உள்ளது என இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பேரரசு

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர் இயக்குனர் பேரரசு. முதன்முறையாக எதிரும் புதிரும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு திருப்பாச்சி, சிவகாசி ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலமாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களை இயக்கி வெற்றிகண்டார். ஆனால் அவரின் சில திரைப்படங்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதனால் சில வருடங்களா அவர் திரைப்படங்கள் எதும் இயக்கவில்லை. அவர் சமீபகாலமாக திரைப்பட விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு பேசி வருகிறார்.

இயக்குனர் பேரரசு

பாஜகவில் பேரரசு

இவர் கடந்த 2020ம் ஆண்டு பாஜகவில் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் தன்னை இணைத்து கொண்டார். அதனை தொடர்ந்து பாஜக கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். மேலும், நடந்து முடிந்த 2021ம் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கும், கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

இதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முதல்வராகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பாஜக தலைமை ஒரு விஷயத்தை கட்டாயம் செய்யவேண்டும் என்றார். ‘திராவிட முன்னேற்ற கழகத்தில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற மிகத் திறமையான பேச்சாளர்கள் இருந்தனர். அதிமுகவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் என்ற மக்கள் மனதில் பதிந்த முகம் இருந்தது. ஆனால் பாரதீய ஜனதா கட்சியில் பிரபலமான பேச்சாளர்கள் இல்லை. ஆனால், இப்போது பாஜக தலைவராக உள்ள அண்ணாமலையை தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் அவரை ஏற்றுக்கொண்டுவிட்டனர்’ என கூறினார்.

பாஜகவில் பேரரசு

முதல்வர் தகுதி

மேலும், ‘அண்ணாமலை தமிழகத்தில் எங்கு சென்றாலும் அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அந்த தகுதி அவருக்கு இருக்கிறது’ என இயக்குனர் பேரரசு கூறியுள்ளார்.

பேரரசு இவ்வாறு கூறியதை சமூகவலைத்தளத்தில் சிலர் வரவேற்றும் சிலர் விமர்சித்தும் வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் பேரரசு அண்ணாமலையை முன்னாள் முதல்வர் காமராஜரோடு ஒப்பிட்டு கூறியது குறிப்பிட்டத்தக்கது.

annamalai

Related posts