தக்காளியின் விலை வீழ்ச்சி சாலை ஓரம் கொட்டிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தக்காளி விலை வீழ்ச்சி
ஆந்திர மாநிலத்தில், அனந்தபூர் மாவட்டம், ராப்தாடு, சிங்கனமலை, கல்யாணதுர்கம் பகுதியில் அதிகளவில் தக்காளி சாகுபடி நடந்து வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் நேற்று காலை ஆட்டோகளில் தக்காளியை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வந்தனர். மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 2 ரூபாயாக உள்ளது. இதனால் சரியான விலை கிடைக்காததால் மொத்த வியாபாரிகளை உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்ய முடியவில்லை. இதனால் விவசாயிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்த தக்காளியை நெடுஞசாலையோரம் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
கடந்த மாதம் ஒரு டன்னுக்கு தக்காளி 1000 ரூபாக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது டன்னுக்கு 300 ரூபாய் கூட கிடைக்கவில்லை. அநேக விவசாயிகள் தக்காளி அறுவடை செய்ய கூலி கூட கிடைக்காததால் காரணத்தில் தக்காளியை அப்படியே அறுவடை செய்யாமல் விட்டுவிட்டனர்.

