ஃபிட்னஸ்

பிரமிக்க வைக்கும் ஷாவோலின் துறவிகளின் சாகசங்கள் !

சீனாவின் ஷாவோலின் டெம்பிள் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. உலக புகழ் பெற்ற அபூர்வ கோவில் அது. அங்கு தீவிரமான பயிற்சிகள் மூலம் புத்த துறவிகள் பல சக்திகளை பெற்று வருகின்றனர்.

இந்த பயிற்சிகள் அனைத்தும் மிகவும் சிரமமானவை என்பதும், இதற்கு நீண்ட கால பயிற்சிகள் தேவைப்படும் என்பதும் நாம் அறிந்த ஒன்றே.

சீன ஷாவோலின் துறவிகளால் தங்களின் உடல் வெப்ப நிலையை சுற்றுப்புற தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப சமன் செய்ய முடியுமாம்.

கோடை காலத்தில் உடல் வெப்ப நிலையை அதிகரிக்கவும், குளிர் காலத்தில் அதன் அளவை குறைக்கவும் முடியும்.

 

அதிலும் குறிப்பாக அவர்கள் எந்த விதமான கருவி அல்லது பொருளின் துணை இன்றி தங்களின் மனம் மற்றும் உடலை கொண்டே இதை செய்கிறார்கள். இதை அவர்களை பரிசோதித்த ஆய்வாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இவர்களால் சாதாரண ஊசியை அதிக விசையை செலுத்தி தூக்கி எரிந்து கண்ணாடியை கூட துளைத்து கொண்டு போகுமாறு செய்ய முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புவதற்கு சிரமமாக தான் இருக்கும். ஆனால் முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளனர்.

150km வேகத்தில் துறவி ஒருவர் தன் சக்தியை பயன்படுத்தி ஊசியை தூக்கி எரிந்து கண்ணாடியை துளைத்து கொண்டு போக செய்திருக்கிறார்.

இந்த துறவிகளால் தங்களின் முழு உடம்பையும் ஒரே ஒரு விரலை கொண்டு தாங்க செய்ய முடியும். இதற்கு கடுமையான பயிற்சி தேவை.

நீர் மேல் நடப்பது :

வியப்பின் உச்சமாக ஷாவோலின் பயிற்சி துறவி ஒருவர் தண்ணீரின் மீது நடந்து காட்டியுள்ளார்.

இதனை உலக சாதனையாக பதிவும் செய்துள்ளனர்.அவர் வெறும் தண்ணீரின் மேல் நடக்கவில்லை. நீரில் மெல்லிய மரப்பாலம் ஒன்று வைத்திருந்தனர்.

எனினும் 50 வினாடிக்குள் சுமார் 120 மீட்டர் தூரம் தண்ணீரின் மீது வேகமாக நடப்பது சாதனை தான். இதற்காக அவர் 9 ஆண்டு பயிற்சியை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொதிக்கும் எண்ணெயில் தியானம் :

இத்தனையும் மேலாக மிகவும் ஆச்சரியமான ஒரு சக்தி என்றால் அது கொதிக்கும் எண்ணையில் தியானம் செய்வது தான்.

ஷாவோலின் கோவில் துறவிகளில் சிலர் குறிப்பிட்ட விழாக்களின் போது மூலிகைகள் கொண்ட மிகப்பெரிய பாத்திரத்தில் எண்ணையை கொதிக்க விடுகின்றனர்.

அதில் ஷாவோலின் துறவி ஒருவர் தியானம் செய்வார். பின்னர் அந்த எண்ணெயை மக்கள் புனிதமாக கருதி வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர்.

இந்த சக்திகள் யாவும் மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை. கடுமையான மற்றும் நீண்ட கால தொடர் பயிற்சிகளின் மூலமாக ஷாவோலின் கோவில் துறவிகள் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் அவர்களின் மனோதிடம், உடல் வலிமை மேம்படுகிறது. இதனால் எந்த சாதனைக்கும் விடா முயற்சி ஒன்றே தேவை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

Related posts