நாட்டின் 75-வது சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
சுதந்திர தின விழா
இதன்பெயரில் சென்னையின் பல இடங்கள் திருவிழா கோலத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையின் பழமை வாய்ந்த முக்கிய கட்டிடங்கள் அனைத்திலும் வண்ண மின்விளக்குகள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற பாரம்பரிய கட்டிடங்களில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. மேலும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ‘ஐ லவ் இந்தியா’ என்ற வாசகம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொள்ளவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

