திருநெல்வேலி அருகே கோயில் திருவிழாவின் போது பக்தர்களுக்கு பரோட்டா அன்னதானம் வழங்கப்பட்டது.
பரோட்டா அன்னதானம்
திருநெல்வேலி அருகே உள்ள முக்கூடலில் ஸ்ரீமன் நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் தற்போது ஆடிமாத கோயில் திருவிழா நடைபெற்ற வருகின்றது. தொடர்ந்து 8 நாட்களுக்கு இந்த திருவிழாவானது நடைபெறும் என கூறபடுகிறது. நேற்று திருவிழாவின் 7ம் நாள் அன்று ஸ்ரீமன் நாராயணசாமி கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினம் பெற்றனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழகப்பட்டது. கோயில் திருவிழாக்களில் அன்னதானம் என்றால் கூட்டு, பொரில் கலந்த உணவாக இருக்கும். ஆனால், இந்த கோயில் சார்ந்த இளைஞர்கள் சற்று மாற்றி யோசித்து பக்தர்களுக்கு அன்னதானமாக பரோட்டா வழங்கினர். 200 கிலோ மைதா மாவை கொண்டு சுமார் 8 ஆயிரம் பரோட்டாவை அப்பகுதி இளைஞர்கள் முயற்சியில் தயார் செய்யப்பட்டு பரோட்டா அன்னதானம் நடந்துள்ளது. இந்த புதிய முயற்சி அந்த பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

