அதிமுக கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்னையன், நத்தம் விசுவநாதன், எஸ்பி வேலுமணி ஆகியோரை நீக்கி அவர்களுக்கான புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய பதவிகள்
அதிமுக கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்னையன், நத்தம் விசுவநாதன், எஸ்பி வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், இவர்கள் புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் அதிமுகவின் துணை பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளராக பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து எஸ்பி வேலுமணி அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

