மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் ஆடித் திருவிழா தேரோட்டம் தொடங்கியது.
ஆடித் தேரோட்டம்
அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. சித்திரைத் திருவிழாவின்பொழுது, கள்ளழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மதுரை நகருக்கு வருகிறார். இந்த விழா மதுரையில் வெகுவிமர்சையாக நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

