இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை வரவேற்று தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இடைக்கால பொதுச்செயலாளர்
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை வரவேற்கும் விதமாக தமிழகத்தில்முழுவதும் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

