கமல் ஹாசன் நடிப்பில் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் படம் விக்ரம். அதில் நடிகர் சூர்யா சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
விக்ரம் படம்
மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுத்துள்ள புதிய படம் விக்ரம். இதில் கமல் ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கமலின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. 1986ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே புதிய தொழில்நுட்பம் உதவியோடு இளம் வயது கமல் ஹாசனை நடிக்க வைத்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
சிறப்புத்தோற்றத்தில் சூர்யா
இந்நிலையில், விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத்தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பகத் பாசில், விஜய்சேதுபதியை தொடர்ந்து சூர்யா கமலுடன் இனைந்து நடிக்கிறார். ஏற்கனவே 2010ம் ஆண்டு கமல், நடிப்பில் வெளியான மன்மதன் அம்பு படத்தில் சூர்யா கமலுடன் சேர்ந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இணைவது ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கமல் ஹாசன்
அரசியல் கட்சி, நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பல வேலைகளில் ஈடுப்பட்டு வந்தார் கமல் ஹாசன். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த இவர், அதன்பிறகு விக்ரம் படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். இதனால் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி கொண்டார்.
சூர்யாவின் படங்கள்
சமீபத்தில் ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்த சூர்யா தற்போது பாலா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் நடித்து முடித்த பிறகு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனிடையே இவர் விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.