அரசியல்தமிழ்நாடு

திமுக, விசிகவுக்கு அண்ணாமலை பதிலடி – திருவாரூரில் பாஜக போரட்டம் !

திமுகவை வம்புக்கு இழுக்கும் அண்ணாமலை, திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை திருவாரூரில் நடந்த கூட்டத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூர் தேரோடும் வீதிகளில் ஒன்றான தெற்கு ரத வீதியை டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்றப்படுவதாக நகர் மன்றத்தில் தீர்மான நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் தெற்கு வீதியில் உள்ள நகராட்சி அலுவலகம் முன் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.

பாஜக அண்ணாமலை பதிலடி

அப்போது அவர், ‘இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை போல, இந்தியாவிலும் ஏற்படும் என திருமாவளவன் கூறிருந்தார். இந்நிலையில், இலங்கையில் குடும்ப அரசியல் காரணமாகவே பொருளாதார சரிவு ஏற்பட்டது. அது தமிழகத்திற்கும் பொருந்தும். இதைபோல் இந்தியாவில் 7 மாநிலங்கள் உள்ளது. பிரதமர் மோடி இந்திய பொருளாதாரத்தை சரிவு ஏற்பட விடமாட்டார். தமிழகத்தின் வீழ்ச்சிக்கு அறிவாலயம் தான் காரணமாக இருக்கும்’ என்று திருமாவளவனுக்கு பதில் கூறியுள்ளார்.

திமுக மீது பாய்ச்சல்

மேலும், ‘மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. தமிழக முதல்வருக்கு பெயர் மாற்றம் செய்யும் மன வியாதி உள்ளதாக கருதுகின்றேன். மோடி இதுவரை ஒரு இடத்திற்கு கூட பெயர் மாற்றம் செய்ததில்லை. சாலை இல்லாத கிராமத்திற்கு சாலை அமைத்துவிட்டு கலைஞர் பெயரை சூட்டுங்கள். ஜாதி வேறுபாடு இருப்பதால் தான் ஜாதி பார்த்து வீடுவீடாக சென்று சாப்பிடுவதும், அதை குடும்ப தொலைக்காட்சி வைத்து கொண்டு வெளியிடுவதையும் நாடகமாக நடத்திவருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய வீட்டிற்கு மற்ற ஜாதினரை அழைத்து விருந்து அளிக்க வேண்டிய தானே. அதுதான் சமூக நீதி என்று அனைவரும் பாராட்டுவர்.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பணம் விடுவிக்க லஞ்சம் கேட்டதால், மனம் முடைந்த இளைஞர் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக நியாயம் கிடைக்க இறுதி வரை போராடும். 2024ம் ஆண்டு 400 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும். 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று நாட்டு மக்களுக்கு விஷ்வ குருவாக இருப்பார்’ என்று கூறினார்.

மனுநீதி சோழன் சாலை

‘திருவாரூர், தெற்கு வீதியை டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்றப்படாது என அதிகாரிகள் கூறினார்கள். இருப்பினும், அதை எழுத்துப்பூர்வமாக அளிக்கவில்லை என்பதால் தான் போராட்டம் நடைபெறுகிறது. தெற்கு ரத வீதிக்கு மனுநீதி சோழன் என பெயர் சூட்ட வேண்டும். கலைஞர் பெயரை சூட்டினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒரு நாள் கூட செயல்படாத வகையில் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

2024ம் ஆண்டு தேர்தல் தான் திமுகவிற்கு இறுதி தேர்தலாக இருக்கும்’ என திருவாரூரில் நடந்த போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

Related posts