சமூகம்சினிமா

ட்ரெண்டாகும் நிவின்பாலியின் புகைப்படம்!

வைரல் புகைப்படம்

2010-ம் ஆண்டு வெளியான ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் நிவின் பாலி. அதனைத்தொடர்ந்து ‘நேரம்’, ‘ஓம் சாந்தி ஓசானா’ படங்களின் மூலம் பிரபலமானார். இவர் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ படம் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். மேலும், இவர் தற்போது ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சமீபகாலமாக நிவின் பாலி உடல் எடை கூடியிருந்தார்.

இந்நிலையில், நிவின் பாலி தனது உடல் எடையை தற்போது குறைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts