புதிய கூட்டணி
‘ஸ்டுடென்ட் நம்பர்.1’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜமௌலி. அதனையடுத்து ‘மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்.’ படங்களின் மூலம் பிரம்மாண்ட இயக்குனரானார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றது. இதில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் இருவரும் நடித்திருந்தனர். அதனையடுத்து மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். அதேபோல் கமல்ஹானும் ‘இந்தியன்-2’, மணிரத்னம் இயக்கும் புதிய படம் என தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

