இந்தியா

புதிய ஸ்கெட்ச் போடும் பகவந்த் மான்…ராஜ்யசபா எம்.பி யாக என்ட்ரி தரும் ஹர்பஜன் சிங்க்!

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்துள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கபடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் 5 மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மீ கட்சி பஞ்சாப் மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சியை பிடித்தது. மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களில் மகத்தான வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஆம் ஆத்மி யின் பகவந்த் மான் பஞ்சாப்பின் முதல்வரானார். ஆம் ஆத்மீ கட்சியின் தலைவரும் டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலுக்கு முன்பே பகவந்த் மான் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்திருந்தார். அதுவே அவர்களுக்கு ஆட்சியை பிடிக்க சாதகமாக அமைந்தது என கூறப்படுகிறது.

 

 

முதல்வர் பகவந்த் மான்


சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் சொந்த கிராமமான கட்கர் காலனில் நேற்று கோலாகலமாக பகவந்த் மான் க்கு பதவியேற்புவிழா நடைபெற்றது. விரைவில் பஞ்சாப் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மீ அவ்விடத்தை புதிய உறுப்பினர்களால் நிரப்ப திட்டமிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் இடம்பெறுவர் என செய்திகள் வெளியாகி உள்ளது.

விளையாட்டுக்கான பல்கலைக்கழகம்


பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் விளையாட்டுக்கான பல்கலைக்கழகம் அமைப்பதாக முதல்வர் பகவந்த் மான் உறுதியளித்துள்ளார். அந்த பல்கலைக்கழகத்திற்கு பொறுப்பாளராக ஹர்பஜன் சிங் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் மக்களிடையே விளையாட்டை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை முதல்வர் பகவந்த் மான் எடுப்பதற்கு உதவும் விதமாக ஹர்பஜன் சிங்கிற்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கப்படும் என தெரிகிறது.

ஹர்பஜன் சிங்க்


‘பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைந்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், புதிதாக முதல்வர் பொறுப்பேற்றுள்ள எனது நண்பர் பகவந்த் மானுக்கும் வாழ்த்துகள். பகத் சிங்கின் பூர்வீக கிராமத்தில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளது சிறப்பானதாகும். இது நம் எல்லோருக்கும் பெருமையான தருணம்’ என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

 

Related posts