தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 8-ந்தேதி ஒரு பவுன் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த 17-ந்தேதி ஒரு பவுன் ரூ.97 ஆயிரம் என்ற உச்சத்தையும் கடந்தது.
மேலும் விலை உயருமோ? என நினைத்த நேரத்தில், அதற்கு மறுநாளே பவுனுக்கு ரூ.1,600 சரிந்து காணப்பட்டது.
தொடர்ச்சியாக நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.95,360-க்கும் தங்கம் விற்பனையானது.
இந்த விலை குறைவு தீபாவளி விற்பனைக்காக என சொல்லப்பட்ட நிலையில், அதற்கேற்றாற்போல், தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாளே தங்கம் விலை மீண்டும் எகிறியது.
கடந்த சில நாட்களாகவே ஒரே நாளில் ஏற்ற இறக்கத்தை தங்கம் விலை சந்தித்து வருகிறது.
அந்த வகையில் நேற்று காலையில் கிராமுக்கு ரூ.260-ம், பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து, மாலையில் அந்த விலையில் இருந்து கிராமுக்கு ரூ.200-ம், பவுனுக்கு ரூ.1,600-ம் குறைந்தது.
மொத்தத்தில் நேற்று முன்தினம் விலையைவிட நேற்று கிராமுக்கு ரூ.60-ம், பவுனுக்கு ரூ.480-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்துக்கும், ஒரு பவுன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது.
சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்து ஒரு பவுன் ரூ.93,600- க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 11,700 ஆக உள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.180 ஆகவும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,80,000-ஆகவும் விற்பனையாகிறது.

