Editor's Picksதமிழ்நாடு

தமிழக பட்ஜெட் 2022- 23 ; மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரானது இன்று தொடங்கியுள்ள நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022 – 2023 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை பேரவையில் சமர்ப்பித்துள்ளார். அதில், அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ₨1000 உதவித்தொகை, காவல்துறைக்கு ₨10,285 கோடி ஒதுக்கீடு, புதிதாக 15 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் அமைக்க ரூ. 125 கோடி நிதி ஒதுக்கீடு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ₨50 கோடி ஒதுக்கீடு ஆகிய முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

 

மேலும், தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு, சென்னை ஆர்.கே.நகரில் புதிய விளையாட்டு வளாகம் ₨10 கோடியில் அமைக்கப்படும், உயர்தர மனநல சேவை வழங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ₨40 கோடி நிதி ஒதுக்கீடு, காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனை மேம்பாட்டிற்கு ₨120 கோடி நிதி ஒதுக்கீடு, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்த உடன் இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts