Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஃபிட்னஸ்»முதுகுவலியை குணப்படுத்தும் திரிகோணாசனம்!

முதுகுவலியை குணப்படுத்தும் திரிகோணாசனம்!

May 27, 20222 Mins Read38 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வடமொழியில் ‘த்ரி’ என்றால் ‘மூன்று’, ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்று பொருள். திரிகோணாசனத்தில் உடலில் மூன்று கோணங்கள் ஏற்படுவதால் இது இப்பெயர் பெற்றது. இது ஆங்கிலத்தில் Triangle Pose என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் பெயரின் பின்னால் வேறு ஒரு காரணமும் இருக்கிறது. முக்கோண வடிவம் என்பது நிலையான தன்மைக் கொண்டதாகக் காலம் காலமாகக் கருதப்பட்டு வருகிறது. மூன்று என்ற எண் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களைக் குறிப்பதாக உள்ளது.

இட, பிங்கல மற்றும் சுசும்னா என்ற மூன்று நாடிகளைக் குறிப்பதாகவும் உள்ளது. இவை சமநிலையில் இருக்கும் போது உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருக்கும்.

திரிகோணாசனம் மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்களைத் தூண்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மூலாதாரம் நிலையான தன்மையை அளிப்பதாகும். சுவாதிட்டானம் உணர்வுகளின் மையம்.

தன்னைச் சுற்றியுள்ளவற்றைத் திறந்த மனதோடு ஏற்கும் பக்குவத்தை அளிக்கக் கூடியது; மணிப்பூரகம், பிரபஞ்சப் பேராற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டதாகும். திரிகோணாசனம் பயில்வதால் இந்த மூன்று சக்கரங்களின் சீரான இயங்குவதால் உடலும் மனமும் நிலையான தன்மையை அடையும்.

இதையும் படிக்க :  போகர் உருவாக்கிய நவபாஷாண சிலை - பழனிமலை முருகன் கோவிலில் மறைந்திருக்கும் அற்புதம்

திரிகோணாசனத்தின் மேலும் சில பலன்கள் :

நுரையீரலை பலப்படுத்துகிறது

முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு முதுகுத்தண்டை பலப்படுத்தவும் செய்கிறது

முதுகுவலியைப் போக்குகிறது

நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது

கழுத்து வலியைப் போக்குகிறது

வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது

கால்களை நீட்சியடையச் செய்வதுடன் கால்களுக்கு பலத்தையும் அளிக்கிறது

மாதவிடாய் வலிகளைப் போக்க உதவுகிறது

சையாடிக் பிரச்சினையை போக்க உதவுகிறது

பதட்டத்தைப் போக்குகிறது

செய்முறை :

தாடாசனத்தில் நிற்கவும்.

இரண்டு கால்களுக்கு இடையில் சுமார் இரண்டு முதல் மூன்று அடி இடைவெளி விட்டு நிற்கவும்.

மூச்சை உள்ளிழுத்தவாறே கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும். கைகள் தோள்களுக்கு நேராக இருக்க வேண்டும். உள்ளங்கைகள் தரையைப் பார்த்த வண்ணம் இருக்க வேண்டும்.

இடது கால் பாதத்தை சற்று வலது புறமாகத் திருப்பவும். வலது பாதத்தை 90 degree கோணத்தில் வெளிப்புறம் திருப்பவும். இரண்டு குதிகால்களும் நேர்க் கோட்டில் இருக்க வேண்டும்.

மூச்சை வெளியேற்றியவாறே மேல் உடலை வலது பக்கமாக சாய்க்கவும்.

இதையும் படிக்க :  ஆயுதபூஜை விடுமுறை - நாளை வண்டலூர் பூங்கா திறப்பு!

வலது கையை வலது காலின் வெளிப்புறமாகத் தரையில் வைக்கவும். மாறாக, வலது காலைப் பற்றிக் கொள்ளவும் செய்யலாம்.

இடது கையை மேல் நோக்கி உயர்த்தவும். இடது கை இடது தோளுக்கு நேராக உயர்த்தவும்.

தலையை இடது கை கட்டை விரலைப் பார்க்கும் வண்ணம் திருப்பவும்.

30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், நிமிர்ந்து மாற்றுப் பக்கம் செய்யவும். தொடர் பயிற்சியில் நேரத்தை ஒரு நிமிடமாக அதிகரிக்கலாம்.

குறிப்பு :

தீவிர முதுகுத்தண்டு கோளாறுகள், இடுப்புப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

தீவிர கழுத்து வலி உள்ளவர்கள் தலையை மேல் நோக்கித் திருப்பாமல் நேராக பார்த்தவண்ணம் இந்த ஆசனத்தைப் பழகலாம். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கீழ் நோக்கி செய்யலாம்.

கையைக் கீழே வைக்க இயலவில்லை என்றால் எட்டும் இடத்தில் காலைப் பற்றியபடி ஆசனத்தைப் பழகலாம். அல்லது, yoga block ஒன்றை கால் அருகில் வைத்து அதன் மேல் கையை வைத்துப் பழகலாம்.

back pain featured Fitness thrigonasana yogasana
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇயற்கை வரையும் அற்புத ஓவியம் – அரோரா எனப்படும் துருவ ஒளி!
Next Article ‘ஹலோ அண்ணாமலை’ தோளை தட்டி நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி – மகிழ்ச்சியில் அண்ணாமலை !

Related Posts

ஃபிட்னஸ்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கனுமா? இந்த 6 ‘சூப்பர் ஃபுட்ஸ்’ கொடுங்க!

March 31, 2026
ஃபிட்னஸ்

காலை Vs மாலை: இதய ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது?

March 26, 2026
ஃபிட்னஸ்

கை நடுக்கம் பிரச்சனை? காரணமாகும் 3 வைட்டமின் குறைபாடுகள்!

March 25, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.