Monday Special

ஏலியன்களும் ஏரியா 51ம்! – வேற்றுகிரகவாசிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு

விண்வெளியில் நடைபெறும் அசாதாரண நிகழ்வுகள், ஒளிக் கீற்றுகள், விண்மீன்களின் சிதறல்கள் போன்றவைகள் கண நேரத்தில் நம் கண்ணில் தென்பட்டு மறைந்து போகும்.

நம்மால் யூகிக்க முடியாத பொருட்கள் விண்ணில் பறந்து மறைந்தால் அதுதான் யுஎஃப்ஒ. உலகில் பல்வேறு பகுதிகளில் இச் சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், அமெரிக்க நிலப் பகுதிகளில் தான் இவைகள் அதிகம் தென்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Storm Area 51 :

கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏலியன்ஸ் பற்றிய வேடிக்கையான கதை ஒன்று பிரபலமாகியது. ‘Area 51’ என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் நவேடா என்ற மாகாணத்திலுள்ள ஒரு பாலைவனப் பகுதியில் ஏலியன்ஸ்களின் ஏர்கிராஃப்ட்கள் தரை இறங்குவதாக ஒரு சில மக்களால் உண்மைக்குப் புறம்பாக நம்பப்பட்டது.

area 51

இந்தப் பகுதி அமெரிக்க உளவுத் துறை மற்றும் விமானப் படைக்குச் சொந்தமான பகுதி.

1950ல் பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டங்களில் இங்கு உளவு பார்க்கும் அதி விரைவு விமானங்களுக்கான ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகள் நடைபெற்று வந்தன.

The Archangel-12 என்ற விமானங்கள் மணிக்கு 2000 மைல்கள் வேகத்தில் பறந்து ஆகாயத்தில் இருந்து பூமியின் படங்களை எடுத்து அனுப்பியது.

இந்த விமானங்கள் வேகமாகப் பறந்ததே அந்தப் பகுதியில் வசித்த மக்களுக்கு ஏலியன்ஸ் போன்ற சிந்தனைகள் வரக் காரணமாக இருந்திருக்கலாம்.

கடந்த 2019 ஆண்டு ஒரு Facebook event group மூலம் ‘Storm Area 51’ எனப் பெயர் சூட்டி இந்தப் பகுதியில் மக்கள் கூடினார்கள். தடை செய்யப்பட்ட பகுதியில் ஏலியன்களை உள்ளே வைத்து சோதனைகள் நடைபெறுகிறது.

storm area 51

இதனைப் பார்ப்பதற்காக ஒன்னரை மில்லியன் மக்கள் இந்த நிகழ்வில் கையொப்பமிட்டு இருந்தார்கள். ‘இந்தப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம், இது அமெரிக்க அரசின் மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும்’ என்றது அமெரிக்க விமானப் படை.

ஏலியன்ஸ் மற்றும் UFO (unidentified flying object) இதைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள உலகளவில் பல்வேறு மக்கள் ஆர்வத்துடன் இருந்தாலும், அமெரிக்காவில் வசிக்கும் ஐம்பது விழுக்காட்டினர் இவைகள் உண்மை தான் என்றே நம்புகிறார்கள்.

வழக்கமாக வாகனங்கள், வீடுகள், நிலங்கள், தொழிற்சாலைகள் வாங்கும் போது அவைகளுக்கு காப்பீடு வாங்குவது வழக்கம். தற்போதைய காலகட்டத்தில் மருத்துவத்திற்கும் காப்பீடு இன்றியமையாததாக இருக்கிறது.

ஆனால், ஏலியன்ஸ் யுஎஃப்ஒ-களால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் இழப்பீடு பெற காப்பீடு செய்து கொள்கிறார்கள். இதனை ‘alien abduction insurance’ என்று அழைக்கிறார்கள்.

லண்டனைச் சேர்ந்த ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனம் ஐரோப்பா முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட காப்பீடுகளை மக்களிடம் இருந்து வாங்கியுள்ளது.

ஏலியன் குறித்து நம்பிக்கை உள்ள நபராக நீங்கள் இருந்தால் அதனைப் பார்த்ததற்கான சான்று மற்றும் தடயங்களைத் தெரிவித்தால் காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

area 51 ufo

‘Storm Area 51’ – இதை அடிப்படையாக வைத்து ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனமும் புதிதாக காப்பீடுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்கள்.

UFO-களைப் பார்த்தாகக் கூறப்படும் இடங்களில் முக்கால்வாசிக்கு மேல் அமெரிக்க நிலப்பகுதியில் உள்ளன. இதில் பல இடங்கள் இராணுவம் மிகவும் இரகசியமாக வைத்திருக்கும் இடங்களாகும்.

Falcon Heavy test flight :

உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் 2018ல் தனது SpaceX நிறுவனத்தின் மூலம் Falcon Heavy test flight ஒன்றை சோதனைக்காக விண்ணில் ஏவினார்.

அதில் அவர் பயன்படுத்திய Tesla’s roadster வாகனத்தில் பொம்மை வடிவில் ஒரு மனிதர் வாகனத்தை ஓட்டுவதாக அமைத்திருந்து அதனையும் சேர்த்தே விண்ணில் செலுத்தினார்கள்.

அந்த வாகனத்தில் பயன்படுத்திய மின்னணு சாதனங்களில் ‘Made in Earth by humans’ என்று எழுதி இருந்தது.

tesla roadster

ஒருவேளை வேற்றுக் கிரகவாசிகள் வந்து இதைப் பார்த்து, அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியும் பட்சத்தில் ‘இந்த வாகனம் மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப் பட்டது’ என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காக அப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

சமீபகாலமாக உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் 3000க்கும் மேற்பட்ட யுஎஃப்ஒகள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் 90% identified என்று ufologist-கள் கூறுகிறார்கள். அதாவது, ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள், விண்மீன்கள் என்கிறார்கள். இதில் 10% மட்டுமே கண்டுபிடிக்க முடியாத பொருட்களாக இருந்துள்ளது.

Related posts