மோஷன் போஸ்டர்
‘அண்ணாத்த’ படத்தை அடுத்து இயக்குனர் சிவா தற்போது நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில், சூர்யா- 42 மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் இப்படம் 3டியில் 10 மொழிகளில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
We seek all your good wishes as we begin our adventure!https://t.co/18rEmsLxom #Suriya42 @directorsiva @ThisIsDSP @DishPatani @iYogiBabu @vetrivisuals@kegvraja @StudioGreen2 @UV_Creations
— Suriya Sivakumar (@Suriya_offl) September 9, 2022