ஆன்மீகம்இந்தியா

புரட்டாசி பூஜை – சபரிமலை கோவில் நடை திறப்பு !

ஓணப்பண்டிகை முடிவடைந்த நிலையில் நாளை இரவு 10 மணியளவில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்படுகிறது.

சபரிமலை கோவில்

கேரளாவில் உள்ள சிறப்பு மிக்க சபரிமலை ஐயப்பன் கோவில் ஓணப்பண்டிகையையொட்டி கடந்த 6-ந் தேதி திறக்கப்பட்டது. நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றது. மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு ஓண விருந்தும் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஓணப்பண்டிகை நிறைவடைந்ததை தொடர்ந்து நாளை இரவு 10 மணியளவில் கோவில் நடை அடைக்கப்படுகிறது. இதனையடுத்து புரட்டாசி மாத பூஜையையொட்டி வரும் 16-ம் தேதி சபரிமலை கோவில் திறக்கப்படவுள்ளது.

Related posts