சமூகம்தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை !

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு

வரும் 11-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதேபோல் அக்டோபர் மாதம் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் பரமக்குடிக்கு வருவார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகும் என்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இன்று முதல் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு  தடை 

மேலும், இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் நாட்களில் வெளி மாவட்டத்தில் இருந்து வாடகை வாகனங்கள் முறையான அனுமதி இல்லாமல் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வரக்கூடாது. அதேபோல் 4 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts