புதிய விதிகளின்படி H1B விசாவில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்றால் அந்த நிறுவனம் அந்த ஊழியருக்கு ரூ.1 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும்.
அதாவது இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் ஆகும். அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பு இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இந்த கட்டண மாற்றம் யாருக்கு என அமெரிக்கா தெளிவாக விளக்கம் அளிக்காத நிலையில் பலரும் கடும் குழப்பத்தில் இருந்து வந்தனர்.
புதிய விதிகள் குறித்து விளக்கமளித்த அமெரிக்கா:
H1B விசா புதிய விதிகள் என்ன கூறுகின்றன என்று தெரியாமல் பலரும் தவித்து வந்த நிலையில் அமெரிக்க அரசு அது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
அதாவது ஏற்கனவே H1B விசா வைத்திருக்கும் நபர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்று கூறியுள்ளது.
மேலும் தற்போது மாணவர் விசாக்கள் தொழில்முறை விசாக்கள் உள்ளிட்ட அமெரிக்க விசாக்களை வைத்திருப்போர் H1B விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது இந்த புதிய கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

