வணிகம்

இந்தியாவில் மின்சார வாகன பயன்பாடும் சவால்களும்

உலகின் முன்னனி நாடுகள் அனைத்தும் இணைந்து புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடிய டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக எலெட்ரிக் வாகனங்களை பயன்படுத்த துவங்கிவிட்டன.

சீனா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே எலெட்ரிக் கார் விற்பனை அதிகரிக்க துவங்கி விட்டாலும் இந்தியாவில் மந்தமாகவே எலெட்ரிக் கார் விற்பனை இருக்கிறது.

இந்த சூழலில் தான், இந்தியாவும் எலெட்ரிக் கார் விற்பனையை அதிகரிக்க துவங்கி இருக்கிறது. மக்களிடம் அதனை வெற்றிகரமாக கொண்டு சேர்ப்பதற்காக வரி குறைப்பு நடவெடிக்கைகளையும் துவங்கி இருக்கிறது.

இந்தியாவில் தற்போது தான் எலெட்ரிக் கார் விற்பனை என்பது சற்று அதிகரிக்க துவங்கி இருக்கிறது. மேலும் அரசு மக்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் வழங்குவது உள்ளிட்ட சலுகைகளை வழங்குமாயின் இன்னும் இது அதிகரிக்கலாம்.

தற்போது இந்தியா 84% சதவிகித எரிபொருளுக்கு இறக்குமதியை தான் சார்ந்து இருக்கிறது. 2030 க்குள் மிகப்பெரிய அளவில் எரிபொருள் இறக்குமதியை குறைக்கலாம் என நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.

அனைத்தையும் தாண்டி நாம் “புவி வெப்பமயமாதல்” பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறோம். இதனை தவிர்க்க ஒரேவழி நாம் மாற்றத்தை ஏற்றுக்கொள்வது தான். அதனை இந்தியா தற்போதுதான் ஏற்றுக்கொள்ள துவங்கி இருக்கிறது. இதில் இன்னும் வேகம் தேவை.

எலெட்ரிக் கார்களை மக்கள் விரும்பாததற்கு காரணம் அதிக விலை என்பது மட்டுமில்லை. சார்ஜ் போடும் விசயம் தான் மக்களை யோசிக்க வைக்கிறது. ஒருமுறை சார்ஜ் போட்டால் குறிப்பிட்ட தூரம் தான் செல்ல முடியும்.

அதற்கும் அதிகமாக போக வேண்டுமெனில் சில மணி நேரமாவது சார்ஜ் போட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதேபோல அனைத்து இடங்களிலும் சார்ஜ் போடுவதற்கான வாய்ப்பும் இன்னும் செய்துதரப்படவில்லை.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டறிய பல்வேறு நிறுவனங்கள் பேட்டரி கண்டுபிடிப்பு விசயத்தில் அக்கறை காட்டி வருகின்றன. விரைவில் ஒரு தீர்வினை அவர்கள் கொண்டு வருவார்கள் என நம்புவோம். ரீ சார்ஜ் மையங்களை அரசே துவங்க வழிவகை செய்திட வேண்டும்.

 

 

Related posts