அரசியல்தமிழ்நாடு

கருணாநிதி நினைவிடத்தில் திடீர் கோபுரம் – திமுக வினர் அதிர்ச்சி!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம்  போன்று அலங்காரத்தை தமிழக இந்து அறநிலையத்துறை அமைத்துள்ளது. இதனை கண்ட திமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

கருணாநிதி

திரு. கருணாநிதி அவர்கள்  திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவராகவும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமாக இருந்தவர். அவர் தமிழ்நாட்டில் தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று காலமானர். அவர் இந்திய அரசியலில் மிக முக்கியமான மூத்த பிரமுகர்களுள் ஒருவர். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்வதற்கு மு.க.ஸ்டாலின் அவர்கள் நீதிமன்றத்தை நாடினார் என்பது அனைவரும் அறிந்தது.

திமுக ஆட்சி

இதனை தொடர்ந்து 2021னில் ஆட்சிக்கு வந்த மு.க. ஸ்டாலின் அவர்கள், கருணாநிதியை அடக்கம் செய்த இடத்தில் 2.21 ஏக்கரில் நினைவிடம் கட்டப்படும் என அறிவித்தார். கருணாநிதி நினைவிடத்தில் நாள்தோறும் திமுகவினர் சார்பில் மலர்களால் அலங்காரம் செய்வது வழக்கமான ஒன்று.

மாநில கோரிக்கை விவாதம்

இந்நிலையில் 2022-2023 நிதியாண்டிற்கான மாநிலகோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இரண்டாவது அமர்வு நடந்துவருகிறது.அதில் நாள்தோறும் துறை ரீதியான மானிய கோரிக்கையான கூடத்தொடர் நடைபெறுகிறது. அந்த வகையில் இன்று இந்து சமய அறநிலை துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற இருந்தது.

நினைவிடம்

இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் இந்து சமய அறநிலை துறை சார்பாக கோவில் கோபுரம் போன்று மலர் அலங்காரம் செய்துள்ளனர். பகுத்தறிவு, கடவுள் மறுப்பு கொள்கைகளை மிக காட்டமாக பல மேடைகளில் பேசிய அவர் நினைவிடத்தில் கோபுரம் போன்று அலங்காரத்தை கண்ட பலர் அதிர்ச்சியாகியுள்ளனர்.

மேலும், இது தான் உங்க பகுத்தறிவா? என்று சமூகவலைத்தளத்தில் திமுகவினரை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளனர்

Related posts