Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»“ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படி படிப்பார்கள் முதல்வரே?” – அன்புமணி

“ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படி படிப்பார்கள் முதல்வரே?” – அன்புமணி

March 15, 20262 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

“ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதல்வரே? மாணவர்களின் கல்வி மீது கொண்ட ஆர்வத்தால் நீங்கள் இந்த சந்திப்பை நிகழ்த்தவில்லை” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு நிர்வாகத்தைக் கவனிப்பதை விட, விளம்பரப் படங்களில் நடிப்பதிலேயே அதிக நேரம் செலவிட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று புதிதாக ஒரு விளம்பரப் படத்தில் நடித்து வெளியிட்டிருக்கிறார்.

முதல்வர் எத்தனை விளம்பரப் படங்களில் வேண்டுமானாலும் நடித்துக் கொள்ளட்டும். அதற்காக மக்களின் வரிப்பணத்தைக் கூட வீணடித்துக் கொள்ளட்டும். அதையும் கூட பொறுத்துக் கொள்வோம். ஆனால், முதல்வரின் சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமை இருக்கிறதா என்பது தான் நமது வினா.

கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தேவா, ஜீவா என்ற சிறுவர்கள் அருகில் உள்ள நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முறையே 5 மற்றும் 2 ஆம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். திரையுலக நட்சத்திரங்களுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடும் அளவுக்கு புகழ்பெற்றிருக்கும் அவர்கள் ‘படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க…’ என்று வலியுறுத்தி வெளியிட்ட ரீல்ஸ் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிக்க :  அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம் - ஜெயக்குமார் விமர்சனம் !

அவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது அலுவலகத்துக்கு அழைத்துப் பேசி வீடியோ வெளியிட்டதுடன், கலெக்டராகவும், காவல்துறை அதிகாரியாகவும் வரும் அளவுக்கு நன்றாக படிக்க வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார். இதில் ஒன்றும் தவறு இல்லை.

முதல்வரின் ஷூட்டிங் பாணியில் பேசுவதாக இருந்தால், அடுத்த ஷாட்டுக்கு கடலூர் மாவட்டம் நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு செல்வோம். அந்த பள்ளியில் தான் ரீல்ஸ் புகழ் மாணவர்கள் தேவாவும், ஜீவாவும் படிக்கிறார்கள்.

நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மொத்தம் 5 வகுப்புகள் உள்ளன. 30 மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். ஆனால், அந்தப் பள்ளியில் ஒரே ஒரு தலைமை ஆசிரியர், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். இரு ஆசிரியர்களை மட்டும் வைத்துக் கொண்டு 5 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்த முடியும்? எப்படி தரமான கல்வி வழங்க முடியும்? தேவாவும், ஜீவாவும் எப்படி கலெக்டராகவும், காவல் அதிகாரியாகவும் ஆவதற்கு ஏற்ற அடிப்படைக் கல்வியை பெற முடியும்? சொல்லுங்க முதல்வரே!

தேவா, ஜீவா பயிலும் பள்ளியின் நிலைமை மட்டும் இவ்வளவு மோசமாக இல்லை. தொடக்கக் கல்வித்துறை சார்பில் 22,831 தொடக்கப் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கு வெறும் 2 ஆசிரியர்கள் மட்டும் தான். மேலும் 3800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கும் சேர்த்து ஒரே ஆசிரியர் தான்.

இதையும் படிக்க :  “பச்சிளம் குழந்தைக்குக் கூட பாதுகாப்பு இல்லாத திமுக அரசு...” - தினகரன் விமர்சனம்

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 29,418 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் ஒரு லட்சம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இந்த லட்சணத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி எங்கிருந்து கிடைக்கும் முதல்வரே.

மாணவர்களின் கல்வி மீது கொண்ட ஆர்வத்தால் நீங்கள் இந்த சந்திப்பை நிகழ்த்தவில்லை; விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாதால் மாநிலம் முழுவதும் மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தை திசை திருப்புவதற்காகத் தான் இந்த விளம்பரப்படத்தை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.

இத்தகைய விளம்பரப்படங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது. இன்னும் சில வாரங்களில் நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உங்களால் மறக்க முடியாத தீர்ப்பை அளிப்பார்கள். அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து தான் நீங்கள் பொழுதைக் கழிக்க வேண்டியிருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமதுரை மீனாட்சி அம்மன் கோயில் அன்னதானத் திட்டத்தில் மாற்றம்… இனி காலை, மாலை சிற்றுண்டி உண்டு
Next Article காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.