Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»‘ஒரு செல்ஃபியுடன் நமது வாழ்க்கையை தொடங்கலாமா?’ – 24 வயது இளம்பெண்ணை சீண்டிய 54 வயது அரசு ஊழியர் கைது

‘ஒரு செல்ஃபியுடன் நமது வாழ்க்கையை தொடங்கலாமா?’ – 24 வயது இளம்பெண்ணை சீண்டிய 54 வயது அரசு ஊழியர் கைது

March 18, 20262 Mins Read5 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

24 வயது இளம்பெண்ணிடம் ‘ஒரு செல்ஃபியுடன் நமது வாழ்க்கையை தொடங்கலாமா? என கேட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் விநாயகம் (வயது 59). இவர் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் கோயம்புத்தூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.

அவருடன் விமானத்தில் பயணித்த 24 வயது இளம்பெண் ஒருவரை உள்ளே ஏறியதிலிருந்து உற்று பார்த்து சிரித்துக்கொண்டே இருந்த செந்தில் விநாயகம், சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அந்த இளம்பெண்ணிடம் சென்று அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த பெண் அவரை தவிர்த்துவிட்டு செல்லவே, மீண்டும் விமான நிலையத்திற்குள் உடைமைகளை எடுக்கும்போதும் அவரை பார்த்துள்ளார். அங்கும் அந்த பெண்ணின் அருகில் சென்ற செந்தில் விநாயகம் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சித்ததாக தெரிகிறது. அதோடு நின்றுவிடாமல், அந்தப் பெண்ணிடம், ‘ஒரு செல்ஃபியோடு நமது வாழ்க்கையை தொடங்கலாமா?’ என கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், இதுகுறித்து அங்கு இருந்த விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிக்க :  சென்னையில் பெண் காவலர் விபரீத முடிவு: கணவன் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

அதனைத் தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள் மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தொடர்புகொண்டு இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விமான நிலையம் சென்ற போலீசார், இளம்பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடமிருந்து எழுத்துப்பூர்வமாக புகார் பெற்றுள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் செந்தில் விநாயகத்தை காவல் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதோடு, அவர் மீது 74 பிஎன்எஸ் என்ற சட்டப்பிரிவின் கீழ் ( பெண்ணிடம் தவறாக நடந்து கொள்வது) வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிக்க :  உ.பி.யில் பிரசவ அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர், நர்ஸ் கைது - தாய், சேய் உயிரிழந்த பரிதாபம்

கோயம்புத்தூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளராக இருப்பதும், தற்போது அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மருத்துவ காரணங்களுக்காக சென்னை வந்திருப்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதனை தொடர்ந்து, செந்தில் விநாயகத்தை போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை எச்சரித்த நீதிபதி சொந்த பிணையில் விடுவித்தார்.

இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleலாரி சக்கரம் தலையில் ஏறி இறங்கியதில் இளைஞர் உயிரிழப்பு – இருசக்கர வாகனத்தில் சென்றபோது நேர்ந்த துயரம்
Next Article அழுத்தம் கொடுத்து கூட்டணியில் சேர்க்க வேண்டிய தேவையில்லை – தவெக குறித்த கேள்விக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதில்

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.