சம்பள உயர்வு
அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘பதான்’. இதில் நடிகை தீபிகா படுகோனே நடிக்க, ஜான் ஆபிரகாம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படத்தின் முதல் பாடலான ‘அழையா மழை’ பாடல் வீடியோ நேற்று முன்தினம் வெளியானது. இதில் தீபிகா படுகோனே கவர்ச்சியாக நடித்திருக்கும் காட்சி இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ‘பதான்’ படத்தில் நடிப்பதற்காக தீபிகா படுகோனே ரூ15 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது அவர் வழக்கமான சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

