வெப் சீரிஸ்
விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான பகவதி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஜெய். அதனைத்தொடர்ந்து சென்னை 28, சுப்ரமணியபுரம், வாமணன், கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட படங்களில் நடித்தது மூலம் பிரபலமானார். இவர் இறுதியாக சுந்தர்.சி இயக்கிய காபி வித் காதல் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகர் ஜெய் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை கனா. நெஞ்சுக்கு நீதி படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
ஜெய் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ட்ரிப்ள்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

