இரண்டாவது பாடல்
விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’.இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தில்ராஜு தயாரிக்கும் இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் ‘தீ தளபதி’ எனும் இரண்டாவது பாடல் வருகிற டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

