டீசர் அறிவிப்பு
சுக்ரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. நான், சலீம், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களின் மூலம் கதாநாயகனாகவும் தடம் பதித்துள்ளார். இவர் கைவசம் தற்போது கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் ஆகிய படங்கள் உள்ளன. அந்தவகையில் இவர் நடிப்பில், சி.எஸ்.அமுதன் இயக்கி வரும் திரைப்படம் ‘ரத்தம்’. இதில் மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துன்னர்.
இந்நிலையில், ‘ரத்தம்’ படத்தின் டீசர் வருகிற டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

