சினிமாவெள்ளித்திரை

இணையத்தில் 25 மில்லியன் தொட்ட சிரஞ்சீவி பட பாடல்!

முதல் பாடல்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் தற்போது தனது 154-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.‘வால்டேர் வீரய்யா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இதில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. மேலும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இதனிடையே இப்படத்தின் முதல் பாடலான ‘பாஸ் பார்ட்டி’ லிரிக்கல் வீடியோ அண்மையில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், ‘பாஸ் பார்ட்டி’ பாடல் இணையத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களை தொட்டுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Related posts