Editor's Picksசினிமா

திருமணத்தை அறிவித்த மஞ்சிமா மோகன் – கவுதம் கார்த்திக் ஜோடி!

சமீபகாலமாக காதலித்து வந்த நடிகர் கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் தனது திருமணத்தை உறுதி செய்துள்ளனர்.

திருமணம் 

கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘தேவராட்டம்’ படத்தில் நடிக்கும்போது கவுதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனை இருவரும் சமீபத்தில் சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதன்தொடர்ச்சியாக இருவரும் வருகிற நவம்பர் 28-ம் தேதி திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இவர்கள் நவம்பர் 28-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதை உறுதி செய்துள்ளனர். மேலும், திருமணத்தில் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்கவுள்ளதாக கூறியுள்ளனர்.

Related posts