சினிமாமருத்துவம்

சமந்தா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

நடிகை சமந்தா

ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘யசோதா’ படத்தில் நடிகை சமந்தா நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்டோர் நடித்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே தனக்கு மயோசிடிஸ் என்ற நோய் கண்டறியப்பட்டுள்ளதாக சமந்தா தெரிவித்தார். மேலும், இதற்காக 3 மாதங்களாக சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறினார்.

வதந்திகள் 

இந்நிலையில், சமந்தாவுக்கு நேற்று நோயின் தாக்குதல் அதிகமானதால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஐதராபாத்திலுள்ள மருத்துவமனையின் முன்பு திரண்டனர். இது தொடர்பாக நடிகை சமந்தா தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சமந்தா வீட்டிலிருந்தபடியே சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Related posts