சினிமாவெள்ளித்திரை

வாரிசு படத்திற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்!

நோட்டீஸ்

விஜய் நடிப்பில், வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே சென்னையில் நடைபெற்று வரும் வாரிசு படப்பிடிப்பில் உரிய அனுமதியின்றி 5 யானைகளை பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தது. மேலும், உரிய ஆவனங்களை விரைவில் சமர்ப்பிப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வாரிசு தயாரிப்பு நிறுவனம் இது தொடர்பாக 7 நாட்களுக்குள் விரிவான விளக்கத்தை சமர்பிக்க வேண்டும் என்று விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related posts