இரண்டாவது பாடல்
அஜித் நடித்து வரும் ‘துணிவு’ திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இத்திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் ‘சில்லா சில்லா’ எனும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ட்விட்டர் பதிவு
இந்நிலையில், இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘காசேதான் கடவுளடா’ என பதிவிட்டுள்ளார். மேலும், பாடலாசிரியர் வைசாக் ‘ மணி மணி மணி’ என குறிப்பிட்டுள்ளார். இதன்முலம் ‘காசேதான் கடவுளடா’ எனும் இரண்டாவது பாடலை பாடலாசிரியர் வைசாக் எழுதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.