அரசியல்சினிமா

உதயநிதிக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

பதவியேற்பு விழா

கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பு விழா இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் தமிழகத்தின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் பதிவு

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு, நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related posts