கமல் அஞ்சலி
1994-ம் ஆண்டு வெளியான ‘அரண்மனை காவலன்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கே.முரளிதரன். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இவர் ‘அன்பே சிவம்’, ‘கோகுலத்தில் சீதை’, ‘பகவதி’, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களை வி.சுவாமிநாதன் ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ளார். இவர் இறுதியாக கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘சகலகலா வல்லவன்’ படத்தை தயாரித்திருந்தார். இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று காலமானார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் கே.முரளிதரன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘அன்பே சிவம் நாட்களை நினைத்துக்கொள்கிறேன். அஞ்சலி’ என குறிப்பிட்டுள்ளார்.

