பள்ளி மாணவர்களுக்கான சிற்பி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
புதிய திட்டம்
சிறார் குற்றசெயல்களுக்கு தீர்வு காணவும், சிறார்களை நல்வழிப்படுத்தவும் ‘சிற்பி’ திட்டம் நாளை சென்னையில் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் முதல் கட்டமாக 100 மாநகராட்சி பள்ளிகளில் 50 மாணவர்களை கொண்டு இந்த சிற்பி திட்டம் தொடங்கவுள்ளது. இந்த திட்டமானது பள்ளிகளில் செயல்படும் தேசிய மாணவர் படை போன்று செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தனி சீருடையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிற்பி திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தொடங்கி வைக்கிறார்.

