இந்தியாவுக்கான தூதர்களின் நியமன பத்திரங்களை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி ஏற்பு
இன்று ஜனாதிபதி மாளிகையில் இந்தியாவுக்கான தூதர்களின் நியமன பத்திரங்கள் ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈகுவடார், சோமாலியா, ஜெர்மனி மற்றும் சுரினாம் ஆகிய நாடுகளின் தூதர்கள் பங்கேற்றனர். தூதர்களின் நியமன பத்திரங்களை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், ஈகுவடார் குடியரசின் தூதர் ஃபிரான்சிஸ்கோ தியோடோரோ மால்டோனடோ குவேவரா, சோமாலியா குடியரசின் தூதர் அகமது அலி தாஹிர், ஜெர்மனி குடியரசின் தூதர் டாக்டர் பிலிப் ஆக்கர்மேன், சுரினாம் குடியரசின் தூதர் அருண்கோமர் ஹர்டியன் நியமனப் பத்திரங்களை ஒப்படைத்தனர்.
President Droupadi Murmu accepted credentials from Ambassadors of Ecuador, Somalia, Germany and Suriname at Rashtrapati Bhavan today. Details: https://t.co/ty5YWN87aO pic.twitter.com/6dgChrSzhs
— President of India (@rashtrapatibhvn) August 26, 2022

