சினிமாவெள்ளித்திரை

பா. ரஞ்சித் படத்திற்கு தணிக்கைக் குழு சான்றிதழ் கிடைத்துள்ளது !

சென்சார் சான்றிதழ்

பா.இரஞ்சித் இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ள இப்படத்தில் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை புகழ் ஷபீர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கு தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாழி பிலிம்ஸ் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Related posts