பாஜக மற்ற கட்சி எம்எல்ஏக்களை வாங்க 6,300 கோடி செலவு செய்துள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
கடந்த சில ஆண்டுகளில் மாற்று கட்சி எம்எல்ஏக்களை வாங்க 6,300 கோடி ரூபாய் பாஜக செலவிட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் மாற்று கட்சியைச் சேர்ந்த 277 எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கி உள்ளதாக கூறினார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை கவிழ்க்க ‘ஆபரேஷன் தாமரை’ என்ற சதி திட்டத்தை தீட்டியுள்ளது. டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க சுமார் 800 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது என கூறியுள்ளார்.

