சினிமாவெள்ளித்திரை

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகை !

வேண்டுகோள்

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களை தொடர்ந்து இயக்குனர் மித்ரன் ஜவஹர், நடிகர் தனுஷ் கூட்டணியில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் நடிகை நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில், நடிகை நித்யா மேனன் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ‘தயவு செய்து என்னை ‘தாய்க்கிழவி’ என அழைக்க வேண்டாம்’ என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts