பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் திரிஷா. இன்னும் இளமை குறையாமல் அதே அழகுடன் ஜொலிக்கும் திரிஷா தமிழில் கமல், விஜய், அஜித் ஆகிய நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் ராங்கி, கர்ஜனை, சதுரங்க வேட்டை-2 ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை திரிஷா விரைவில் அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரசின் மூத்த தலைவர்கள் திரிஷாவை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசியதாகவும், திரிஷா தரப்பில் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

