திருப்பதியில் மாதாந்திர ரூ.300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் நாளை வெளியிடபடுவதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தரிசன டிக்கெட்
திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 தரிசனம் டிக்கெட்கள் நாளை காலை 9 மணி முதல் ஆன்லைனில் விற்பனைக்கு வெளியிடப்படுகிறது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 27-ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மேலும், இந்த பிரமோற்சவ விழா நடைபெறும் நாட்களில் விஐபி தரிசனம் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் ஆகிய அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் இலவச தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

