இந்தியன்-2
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ படத்தை தொடங்கினார் ஷங்கர். பின்னர் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனையடுத்து கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன்-2 மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
பிறந்தநாள் வாழ்த்து
இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில், ‘இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் சங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் @shankarshanmugh அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 17, 2022