கென்யாவின் புதிய அதிபராக ரூட்டோ வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருடைய எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் தலைநகர் நைரோபியில் பதற்றம் நிலவுகிறது.
கென்யாவின் புதிய அதிபர்
கென்யா நாட்டின் அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமரும், மூத்த அரசியல்வாதியுமான ரெய்லா ஒடிங்கா 2 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். துணை அதிபராக இருந்த ரூட்டோ அதிபராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒடிங்காவின் ஆதரவாளர்கள் தலைநகர் நைரோபியில் உள்ள கேபேரா பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டத்தை கலைக்க முயன்றுள்ளன.
முன்னாள் பிரதமர் ஒடிங்காவின் ஆதரவாளர்கள் சாலைகளில் உள்ள வாகனங்களை தீயிட்டு கொளுத்தி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், ரூட்டோவின் ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். கென்யா நாடு முழுவதும் ரூட்டோவின் ஆதரவாளர்கள் உற்சாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

