தமிழகத்தில் அணைத்து மக்களும் நாளை முதல் 15ம் தேதி வரை வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
தேசியக்கொடி
75வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அந்த வகையில் இந்தியா முழுவதும் 20 கோடி வீடுகளில் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ’75-வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
எல்.முருகன் பேச்சு
அதன்பெயரில், இன்று எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்துகிறோம். மேலும், இன்றைய தலைமுறையினருக்கு தேசிய கொடி உடனான பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் அணைத்து மக்களும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்’ என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

