இங்கிலாந்தில் கடும் வறட்சி நிலவி வருவதால் அங்குள்ள தேம்ஸ் நதி வறண்ட நிலையில் காணப்படுகிறது.
தேம்ஸ் நதி
‘old father thames’ என்று இங்கிலாந்து மக்களால் பிரியமாக அழைக்கப்படும் நதியாக தேம்ஸ் நதி விளங்கிறது. தென் மத்திய இங்கிலாந்து நாட்டின் கண்கவர் காட்ஸ்வோல்ட் மலைகளிலுள்ள நான்கு ஊற்றுகளிலிருந்து பெருக்கெடுக்கிறது. அந்த நதி கிழக்கு நோக்கி 350 கிலோமீட்டர் ஓடுகையில் மற்ற கிளை நதிகளும் சேர்ந்து கொள்கின்றன. கடைசியாக 29 கிலோமீட்டர் அகன்ற ஒரு கழிமுகத்தைக் கடந்து வட கடலில் சென்று கலக்கிறது. இந்நிலையில், தேம்ஸ் நதி முன்னேப்பதும் இல்லாததை விட தற்போது வறட்சியை எட்டி விட்டது. அதேபோல், இங்கிலாந்து வறட்சிக்குள் குள்ளாக உள்ளது என சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
1935 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தின் சராசரி மழைப்பொழிவு 23.1 மில்லிமீட்டர் இருந்தது. அதுவும் இந்த மாதத்தின் சராசரி மழை பொலிவானது 35 சதவீதம் மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் மழை பொழிவு மிகவும் குறைவு என இங்கிலாந்து வானிலை அலுவலகம் அறிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் வறட்சியே நிலவியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நதியின் ஆதாரமாக அறியப்படும் இயற்கை நீரூற்று பெரும்பாலான கோடைகாலங்களில் வறண்டுவிடும். ஏதன் காரணமாக விவசாயம் செய்வதற்கு தண்ணீர் பற்றகுரை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு வறண்ட ஆற்றுப்படுகையாக மாறி முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மோசமான சூழல் உருவாகலாம் என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

