கடந்த மாதத்தில் வடகொரியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த நிலையில், கொரோனாவை வென்று விட்டதாக அதிபர் அறிவித்துள்ளார்.
அதிபர் கிம் ஜாங் அன்
வடகொரியாவில் எத்தனை நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை யாருக்கும் தெரியாத ஒன்றாகும். இது குறித்து அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் அன் முறையாக வெளியிட்டதே இல்லை. மர்ம தேசமாக அறியப்படும் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பது அந்த நாட்டு மக்களுக்கு தான் தெரியும். அந்த அளவுக்கு மிகவும் ரகசியம் காக்கும் நாடாக உள்ள வடகொரியா உள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக அங்கு கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. கடந்த மே மாதம் முதல் வட கொரியாவில் 48 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கூறப்பட்டது. எனினும், வடகொரியா இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது குறித்து கிம் ஜாங் அன் கூறுகையில், ‘இது மக்களுக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றி வரலாற்று சிறப்பு, மீண்டும் ஒருமுறை நாம் இந்த உலகிற்கு உணர்த்தியுள்ளோம். இது தான் நம் மக்களின் அசைக்கமுடியாது உறுதிக்கு எடுத்துக்காட்டு’ என அறிவித்துள்ளார்.

