ஆளுநர் மாளிகை ஒன்றும் அரசியல் பேசும் இடமில்லை என கே.எஸ். அழகிரி கருத்து கூறியுள்ளார்.
கே.எஸ். அழகிரி கருத்து
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று தருமபுரி, பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார். அங்கு சுதந்திர தின பவள விழாவையொட்டி கட்சி சார்பில் நடத்தப்பட்ட பாத யாத்திரையை கே.எஸ். அழகிரி தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,’நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை காங்கிரஸ் சார்பில் எழுச்சியுடன் கொண்டாடுகிறோம். ஆர்.எஸ்.எஸ், ஜனசங்கம், சங்பரிவா போன்ற அமைப்புகள் சுதந்திர தினத்தை கொண்டாடியதில்லை. தற்போது கொண்டாடுவது வரவேற்புக்குரியது. ஆனால் இவ்வளவு நாள் கொண்டாடாதது ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ளார். ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதாக கூறுவது மரபு மீறிய செயல். ஆளுநர் மாளிகை ஒன்றும் அரசியல் பேசும் இடம் இல்லை. முன்பை விட உணவு உற்பத்தியில் நாம் நாடு தன்னிறைவு பெற்றுவிட்டது. ஆனாலும் எண்ணெய் வித்துகளை இன்னமும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறோம். இந்த நிலை மாற நெல், கரும்பு போல எண்ணெய் வித்துகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என கே.எஸ். அழகிரி பேசியுள்ளார்.

